இந்த காணொளியில் உள்ள தகவல்கள்
கோபப் படுவதனால் என்ன தீமை வரும் ? கோபத்தை அடக்க என்ன செய்யலாம் ? கோபத்தை கட்டுப்படுத்தினால் என்ன நன்மை வரும் ?
அறத்துப்பால் - வெகுளாமை | Arathupal - Vegulamai
குறள் : 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk
Kaakkinen Kaavaakkaal En?
குறள் : 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற
Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum
Iladhanin Theeya Pira
குறள் : 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்
Maraththal Vekuliyai Yaarmaattum Theeya
Piraththal Adhanaan Varum
குறள் : 304
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற
Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pira
குறள் : 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal
Thannaiye Kollunj Chinam
குறள் : 306
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
Sinamennum Serndhaaraik Kolli Inamennum
Emap Punaiyaich Chutum
குறள் : 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
Sinaththaip Porulendru Kontavan Ketu
Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru
குறள் : 308
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
Inareri Thoivanna Innaa Seyinum
Punarin Vekulaamai Nandru
குறள் : 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்
Ulliya Thellaam Utaneydhum Ullaththaal
Ullaan Vekuli Enin
குறள் : 310
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith
Thurandhaar Thurandhaar Thunai