தீவினையச்சம் - ஏன் தீமை செய்ய பயப்பட வேண்டும்? | Why be afraid to do evil?

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் புகழ் - குறள்கள் 201 - 210 | Learn Thirukkural for Extraordinary Life - Adhigaram Theevinai Achcham

Posted on Wed, Sep 9, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

ஏன் தீமை செய்ய பயப்பட வேண்டும்? பிறர்க்குத் தீமை செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? நாம் நன்றாக வாழ என்ன செய்யவேண்டும்?

அறத்துப்பால் - தீவினையச்சம் | Arathupal - Theevinai Achcham

குறள் : 201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு		

Theevinaiyaar Anjaar  Vizhumiyaar  Anjuvar
Theevinai  Ennum  Serukku 		

குறள் : 202

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்		

Theeyavai Theeya  Payaththalaal  Theeyavai
Theeyinum  Anjap  Patum 		

குறள் : 203

அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்		

Arivinul Ellaan  Thalaiyenpa  Theeya
Seruvaarkkum  Seyyaa  Vital 		

குறள் : 204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு		

Marandhum Piranketu  Soozharka  Soozhin
Aranjoozham  Soozhndhavan  Ketu 		

குறள் : 205

இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து		

Ilan Endru  Theeyavai  Seyyarka  Seyyin
Ilanaakum  Matrum  Peyarththu 		

குறள் : 206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்		

Theeppaala Thaanpirarkan  Seyyarka  Noippaala
Thannai  Atalventaa  Thaan 		

குறள் : 207

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்		

Enaippakai Yutraarum  Uyvar  Vinaippakai
Veeyaadhu  Pinsendru  Atum 		

குறள் : 208

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று		

Theeyavai Seydhaar  Ketudhal  Nizhaldhannai
Veeyaadhu  Atiurain  Thatru 		

குறள் : 209

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்		

Thannaiththaan Kaadhala  Naayin  Enaiththondrum
Thunnarka  Theevinaip  Paal 		

குறள் : 210

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்		

Arungetan Enpadhu  Arika  Marungotith
Theevinai  Seyyaan  Enin