இந்த காணொளியில் உள்ள தகவல்கள்
இல்லறத்தில் வாழ்பவரின் பெருமை என்ன ? இனிய இல்லறமாக இருக்க எப்படி வாழ வேண்டும் ? ஏன் இல்லறம் துறவறத்தை விட சிறந்தது ?
அறத்துப்பால் - இல்வாழ்க்கை | Arathupal - Ilvaazhkkai
குறள் : 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
Ilvaazhvaan Enpaan Iyalputaiya Moovarkkum
Nallaatrin Nindra Thunai
குறள் : 42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
Thurandhaarkkum Thuvvaa Dhavarkkum Irandhaarkkum
Ilvaazhvaan Enpaan Thunai
குறள் : 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu
Aimpulaththaaru Ompal Thalai
குறள் : 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
Pazhiyanjip Paaththoon Utaiththaayin Vaazhkkai
Vazhiyenjal Egngnaandrum Il
குறள் : 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai
Panpum Payanum Adhu
குறள் : 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்
Araththaatrin Ilvaazhkkai Aatrin Puraththaatril
Pooip Peruva Thevan?
குறள் : 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan
Muyalvaarul Ellaam Thalai
குறள் : 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
Aatrin Ozhukki Aranizhukkaa Ilvaazhkkai
Norpaarin Nonmai Utaiththu
குறள் : 49
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
Aran Enap Pattadhe Ilvaazhkkai Aqdhum
Piranpazhippa Thillaayin Nandru
குறள் : 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanu�ryum
Theyvaththul Vaikkap Patum