கடவுள் வாழ்த்து - அதிகாரம் எளிய விளக்கம் | Vaazhkkai Thunainalam - Adhigaram Simple Explanation

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் கடவுள் வாழ்த்து - குறள்கள் 1 - 10 | Meaning for Adhigaram Kadavul Vazhthu - Learn Thirukkural for Extraordinary Life

Posted on Sat, May 23, 2020 thirukkural arathupal adhigaram

அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து | Arathupal - Kadavul Vazhthu

குறள் : 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு		

Akara Mudhala  Ezhuththellaam  Aadhi
Pakavan  Mudhatre  Ulaku 		

குறள் : 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்		

Katradhanaal Aaya  Payanenkol  Vaalarivan
Natraal  Thozhaaar  Enin 		

குறள் : 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்		

Malarmisai Ekinaan  Maanati  Serndhaar
Nilamisai  Neetuvaazh  Vaar 		

குறள் : 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல		

Ventudhal Ventaamai  Ilaanati  Serndhaarkku
Yaantum  Itumpai  Ila 		

குறள் : 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு		

Irulser Iruvinaiyum  Seraa  Iraivan
Porulser  Pukazhpurindhaar  Maattu 		

குறள் : 6

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்		

Porivaayil Aindhaviththaan  Poidheer  Ozhukka
Nerinindraar  Neetuvaazh  Vaar 		

குறள் : 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது		

Thanakkuvamai Illaadhaan  Thaalserndhaark  Kallaal
Manakkavalai  Maatral  Aridhu 		

குறள் : 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது		

Aravaazhi Andhanan  Thaalserndhaark  Kallaal
Piravaazhi  Neendhal  Aridhu 		

குறள் : 9

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை		

Kolil Poriyin  Kunamilave  Enkunaththaan
Thaalai  Vanangaath  Thalai 		

குறள் : 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்		

Piravip Perungatal  Neendhuvar  Neendhaar
Iraivan  Atiseraa  Thaar