அன்புடைமை - அதிகாரம் எளிய விளக்கம் | Anbudaimai - Adhigaram Simple Explanation

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் அன்புடைமை - குறள்கள் 71 - 80 | Meaning for Adhigaram Anbudaimai - Learn Thirukkural for Extraordinary Life

Posted on Thu, Jun 18, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

அன்புடையவருக்கான அடையாளம் எது ? அன்புடையவர் அடையும் சிறப்பு என்ன ? அன்பில்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?

அறத்துப்பால் - அன்புடைமை | Arathupal - Anbudaimai

குறள் : 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்		

Anpirkum Unto  Ataikkundhaazh  Aarvalar
Punkaneer  Poosal  Tharum 		

குறள் : 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு		

Anpilaar Ellaam  Thamakkuriyar  Anputaiyaar
Enpum  Uriyar  Pirarkku 		

குறள் : 73

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு		

Anpotu Iyaindha  Vazhakkenpa  Aaruyirkku
Enpotu  Iyaindha  Thotarpu 		

குறள் : 74

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு		

Anpu Eenum  Aarvam  Utaimai  Adhueenum
Nanpu  Ennum  Naataach  Chirappu 		

குறள் : 75

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு		

Anputru Amarndha  Vazhakkenpa  Vaiyakaththu
Inputraar  Eydhum  Sirappu 		

குறள் : 76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை		

Araththirke Anpusaar  Penpa  Ariyaar
Maraththirkum  Aqdhe  Thunai 		

குறள் : 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்		

Enpi Ladhanai  Veyilpolak  Kaayume
Anpi  Ladhanai  Aram 		

குறள் : 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று		

Anpakath Thillaa  Uyirvaazhkkai  Vanpaarkan
Vatral  Marandhalirth  Thatru 		

குறள் : 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு		

Puraththurup Pellaam  Evanseyyum  Yaakkai
Akaththuruppu  Anpi  Lavarkku 		

குறள் : 80

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு		

Anpin Vazhiyadhu  Uyirnilai  Aqdhilaarkku
Enpudhol  Porththa  Utampu