அழுக்காறாமை - பொறாமை குணத்தை நீக்குவது எப்படி ? | How to Stop Envying Others?

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் புகழ் - குறள்கள் 161 - 170 | Learn Thirukkural for Extraordinary Life - Adhigaram Alukkaramai

Posted on Fri, Aug 7, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

பொறாமை குணம் எவ்வளவு கொடிய தீமைகளை தரும் ? பொறாமை குணம் இருக்கின்றதா என்று எப்படி தெரிந்து கொள்வது ? பொறாமை குணத்தை நீக்குவது எப்படி ?

அறத்துப்பால் - அழுக்காறாமை | Arathupal - Alukkaramai

குறள் : 161

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு		

Ozhukkaaraak Kolka  Oruvandhan  Nenjaththu
Azhukkaaru  Ilaadha  Iyalpu 		

குறள் : 162

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்		

Vizhuppetrin Aqdhoppadhu  Illaiyaar  Maattum
Azhukkaatrin  Anmai  Perin 		

குறள் : 163

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்		

Aranaakkam Ventaadhaan  Enpaan  Piranaakkam
Penaadhu  Azhukkarup  Paan 		

குறள் : 164

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து		

Azhukkaatrin Allavai  Seyyaar  Izhukkaatrin
Edham  Patupaakku  Arindhu 		

குறள் : 165

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது		

Azhukkaaru Utaiyaarkku  Adhusaalum  Onnaar
Vazhukka�yum  Keteen  Padhu 		

குறள் : 166

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்		

Kotuppadhu Azhukkaruppaan  Sutram  Utuppadhooum
Unpadhooum  Indrik  Ketum 		

குறள் : 167

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்		

Avviththu Azhukkaaru  Utaiyaanaich  Cheyyaval
Thavvaiyaik  Kaatti  Vitum 		

குறள் : 168

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்		

Azhukkaaru Enaoru  Paavi  Thiruchchetruth
Theeyuzhi  Uyththu  Vitum 		

குறள் : 169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்		

Avviya Nenjaththaan  Aakkamum  Sevviyaan
Ketum  Ninaikkap  Patum 		

குறள் : 170

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்		

Azhukkatru Akandraarum  Illai  Aqdhuillaar
Perukkaththil  Theerndhaarum  Il