இறைமாட்சி - ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ன | What qualities a leader should have?

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் இறைமாட்சி - குறள்கள் 381 - 390 Learn Thirrukural for Extraordinary Life - Adhigaram Irai Maatchi

Posted on Fri, Apr 16, 2021 thirukkural arathupal adhigaram announcement

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

ஒரு அரசனுடைய கடமைகள் என்ன ? ஒரு சிறந்த தலைவன் மக்கள் மனதில் எப்படி மதிக்கப்படுவான் ? சிறந்த தலைவன் இருந்தால் என்ன நன்மைகள் நடக்கும் ?

அறத்துப்பால் - இறைமாட்சி | Arathupal - Irai Maatchi

குறள் : 381

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு

Pataikuti Koozhamaichchu  Natparan  Aarum
Utaiyaan  Arasarul  Eru

குறள் : 382

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு

Anjaamai Eekai  Arivookkam  Innaankum
Enjaamai  Vendhark  Kiyalpu

குறள் : 383

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு

383 Thoongaamai  Kalvi  Thunivutaimai  Immoondrum
Neengaa  Nilanaan  Pavarkku

குறள் : 384

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு

Aranizhukkaa Thallavai  Neekki  Maranizhukkaa
Maanam  Utaiya  Tharasu

குறள் : 385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

Iyatralum Eettalung  Kaaththalum  Kaaththa
Vakuththalum  Valla  Tharasu

குறள் : 386

காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

Kaatchik Keliyan  Katunjollan  Allanel
Meekkoorum  Mannan  Nilam

குறள் : 387

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

Insolaal Eeththalikka  Vallaarkkuth  Thansolaal
Thaankan  Tanaiththiv  Vulaku

குறள் : 388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்

Muraiseydhu Kaappaatrum  Mannavan  Makkatku
Iraiyendru  Vaikkap  Patum

குறள் : 389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு

Sevikaippach Chorporukkum  Panputai  Vendhan
Kavikaikkeezhth  Thangum  Ulaku

குறள் : 390

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

Kotaiyali Sengol  Kutiyompal  Naankum
Utaiyaanaam  Vendhark  Koli