வாழ்க்கைத் துணைநலம் - அதிகாரம் எளிய விளக்கம் | Vaazhkkai Thunainalam - Adhigaram Simple Explanation

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம் - குறள்கள் 51 - 60 | Meaning for Adhigaram Vaazhkkai Thunainalam - Learn Thirukkural for Extraordinary Life

Posted on Thu, Jun 11, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

குடும்ப தலைவிக்கு இருக்க வேண்டிய பண்புகள் எவை? | What characteristics are required for a family woman? கற்பு நெறியில் வாழும் பெண்ணின் சிறப்பு என்ன ? | What is special about the women living a virtuous life? நற்பண்புடைய பெண்ணை துணையாக பெற்றவனின் பெருமை என்ன? | What are the reputations of a person who got a good characteristic wife?

அறத்துப்பால் - வாழ்க்கைத் துணைநலம் | Arathupal - Vaazhkkai Thunainalam

குறள் : 51

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை		

Manaikdhakka Maanputaiyal Aakiththar Kontaan
Valaththakkaal Vaazhkkaith Thunai 		

குறள் : 52

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்		

Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai
Enaimaatchith Thaayinum Il 		

குறள் : 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை		

Illadhen Illaval Maanpaanaal Ulladhen
Illaval Maanaak Katai? 		

குறள் : 54

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்		

Pennin Perundhakka Yaavula Karpennum
Thinmaiun Taakap Perin 		

குறள் : 55

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை		

Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal
Peyyenap Peyyum Mazhai 		

குறள் : 56

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்		

Tharkaaththuth Tharkontaar Penith Thakaisaandra
Sorkaaththuch Chorvilaal Pen 		

குறள் : 57

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை		

Siraikaakkum Kaappevan Seyyum Makalir
Niraikaakkum Kaappe Thalai 		

குறள் : 58

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு		

Petraar Perinperuvar Pentir Perunjirappup
Puththelir Vaazhum Ulaku 		

குறள் : 59

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை		

Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun
Erupol Peetu Natai 		

குறள் : 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு		

Mangalam Enpa Manaimaatchi Matru Adhan
Nankalam Nanmakkat Peru