புறங்கூறாமை - புறம் பேசுவதை தவிர்ப்பது எப்படி? | How to Stop Gossiping?

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் புகழ் - குறள்கள் 181 - 190 | Learn Thirukkural for Extraordinary Life - Adhigaram Purankooramai

Posted on Thu, Aug 13, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

புறம் பேசுவதற்கு காரணம் என்ன? | Why we Gossip ? புறங்கூறுதல் எவ்வளவு தீமையானது? | How bad is Gossiping ? புறங்கூறுதலை நீக்க வழி என்ன? | How to Stop gossiping?

அறத்துப்பால் - புறங்கூறாமை | Arathupal - Purankooramai

குறள் : 181

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது		

Arangooraan Alla Seyinum Oruvan
Purangooraan Endral Inidhu 		

குறள் : 182

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை		

Aranazheei Allavai Seydhalin Theedhe
Puranazheeip Poiththu Nakai 		

குறள் : 183

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்		

Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal
Arangootrum Aakkath Tharum 		

குறள் : 184

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்		

Kannindru Kannarach Chollinum Sollarka
Munnindru Pinnokkaach Chol 		

குறள் : 185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்		

Aranjollum Nenjaththaan Anmai Puranjollum
Punmaiyaar Kaanap Patum 		

குறள் : 186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்		

Piranpazhi Kooruvaan Thanpazhi Yullum
Thirandherindhu Koorap Patum 		

குறள் : 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்		

Pakachchollik Kelirp Pirippar Nakachcholli
Natpaatal Thetraa Thavar 		

குறள் : 188

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு		

Thunniyaar Kutramum Thootrum Marapinaar
Ennaikol Edhilaar Maattu 		

குறள் : 189

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை		

Arannokki Aatrungol Vaiyam Purannokkip
Punsol Uraippaan Porai 		

குறள் : 190

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு		

Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin
Theedhunto Mannum Uyirkku