பயனில சொல்லாமை - பயனுள்ளதையே பேச வேண்டும் | Speak only what is useful

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் பயனில சொல்லாமை - குறள்கள் 191 - 200 | Learn Thirukkural for Extraordinary Life - Adhigaram Payanila Sollamai

Posted on Thu, Aug 20, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

ஏன் பயனுள்ளவற்றையே பேச வேண்டும் ? பயனில்லாத வார்த்தைகளை பேசுவது எவ்வளவு தீமையானது ? பயனில்லாத விஷயங்களை எப்படி தவிர்ப்பது ?

அறத்துப்பால் - பயனில சொல்லாமை | Arathupal - Payanila Sollamai

குறள் : 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்		

Pallaar Muniyap Payanila Solluvaan
Ellaarum Ellap Patum 		

குறள் : 192

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது		

Payanila Pallaarmun Sollal Nayanila
Nattaarkan Seydhalir Reedhu 		

குறள் : 193

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை		

Nayanilan Enpadhu Sollum Payanila
Paarith Thuraikkum Urai 		

குறள் : 194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து		

Nayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap
Panpilsol Pallaa Rakaththu 		

குறள் : 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்		

Seermai Sirappotu Neengum Payanila
Neermai Yutaiyaar Solin 		

குறள் : 196

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்		

Payanil Sol Paaraattu Vaanai Makanenal
Makkat Padhati Yenal 		

குறள் : 197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று		

Nayanila Sollinunj Cholluka Saandror
Payanila Sollaamai Nandru 		

குறள் : 198

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்		

Arumpayan Aayum Arivinaar Sollaar
Perumpayan Illaadha Sol 		

குறள் : 199

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்		

Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha
Maasaru Kaatchi Yavar 		

குறள் : 200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்		

Solluka Sollir Payanutaiya Sollarka
Sollir Payanilaach Chol