ஈகை - கொடுப்பதால் என்ன நன்மைகள் ஏற்படும் ? | What are the benefits of Charity ?

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் புகழ் - குறள்கள் 221 - 230 | Learn Thirukkural for Extraordinary Life - Adhigaram Eegai

Posted on Thu, Sep 24, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

ஈதல் எப்படி இருக்க வேண்டும் ? ஈகை செய்வதால் என்ன நன்மை ? ஈதல் எவ்வளவு சிறந்தது ?

அறத்துப்பால் - ஈகை | Arathupal - Eegai

குறள் : 221

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து		

Variyaarkkondru Eevadhe Eekaimar Rellaam
Kuriyedhirppai Neera Thutaiththu 		

குறள் : 222

நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று		

Nallaaru Eninum Kolaldheedhu Melulakam
Illeninum Eedhale Nandru 		

குறள் : 223

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள		

Ilanennum Evvam Uraiyaamai Eedhal
Kulanutaiyaan Kanne Yula 		

குறள் : 224

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு		

Innaadhu Irakkap Patudhal Irandhavar
Inmukang Kaanum Alavu 		

குறள் : 225

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்		

Aatruvaar Aatral Pasiaatral Appasiyai
Maatruvaar Aatralin Pin 		

குறள் : 226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி		

Atraar Azhipasi Theerththal Aqdhoruvan
Petraan Porulvaip Puzhi 		

குறள் : 227

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது		

Paaththoon Mareei Yavanaip Pasiyennum
Theeppini Theental Aridhu 		

குறள் : 228

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்		

Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai
Vaiththizhakkum Vanka Navar 		

குறள் : 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்		

Iraththalin Innaadhu Mandra Nirappiya
Thaame Thamiyar Unal 		

குறள் : 230

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை		

Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai