அடக்கம் உடைமை - அதிகாரம் எளிய விளக்கம் | Adakam Udaimai - Adhigaram Simple Explanation

உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் அடக்கம் உடைமை - குறள்கள் 121 - 130 | Meaning for Adhigaram Adakam Udaimai - Learn Thirukkural for Extraordinary Life

Posted on Thu, Jul 23, 2020 thirukkural arathupal adhigaram

இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

ஏன் அடக்கத்துடன் வாழ வேண்டும்? அடக்கமாக வாழ என்ன செய்ய வேண்டும் ? அடக்கத்துடன் இருப்பவர்கள் எவ்வளவு பெரியவர்கள் ?

அறத்துப்பால் - அடக்கம் உடைமை | Arathupal - Adakam Udaimai

குறள் : 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்		

Atakkam Amararul  Uykkum  Atangaamai
Aarirul  Uyththu  Vitum 		

குறள் : 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு		

Kaakka Porulaa  Atakkaththai  Aakkam
Adhaninooung  Killai  Uyirkku 		

குறள் : 123

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்		

Serivarindhu Seermai  Payakkum  Arivarindhu
Aatrin  Atangap  Perin 		

குறள் : 124

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது		

Nilaiyin Thiriyaadhu  Atangiyaan  Thotram
Malaiyinum  Maanap  Peridhu 		

குறள் : 125

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து		

Ellaarkkum Nandraam  Panidhal  Avarullum
Selvarkke  Selvam  Thakaiththu 		

குறள் : 126

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து		

Orumaiyul Aamaipol  Aindhatakkal  Aatrin
Ezhumaiyum  Emaap  Putaiththu 		

குறள் : 127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு		

Yaakaavaa Raayinum  Naakaakka  Kaavaakkaal
Sokaappar  Sollizhukkup  Pattu 		

குறள் : 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்		

Ondraanun Theechchol  Porutpayan  Untaayin
Nandraakaa  Thaaki  Vitum 		

குறள் : 129

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு		

Theeyinaar Suttapun  Ullaarum  Aaraadhe
Naavinaar  Sutta  Vatu 		

குறள் : 130

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து		

Kadhangaaththuk Katratangal  Aatruvaan  Sevvi
Arampaarkkum  Aatrin  Nuzhaindhu